;
Athirady Tamil News

அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டத்தை இடித்து அகற்ற நல்லூர் பிரதேச சபைக்கு அனுமதி – அதற்கான செலவை வழங்க உரிமையாளருக்கு உத்தரவு

0
யாழ்ப்பாணத்தில் அனுமதியின்றி கட்டடம் கட்டியவருக்கு 30 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிப்பட்டுள்ளதுடன் , பிரதேச சபையினால் கட்டடத்தை அகற்றுவதற்காக ஏற்படும் செலவீனத்தை கட்டட உரிமையாளர் பிரதேச சபைக்கு செலுத்த வேண்டும் என யாழ்ப்பாணம் மேலதிக நீதவான் நீதிமன்று தீர்ப்பளித்துள்ளது. 

நல்லூர் பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்பட்ட , பரமேஸ்வரா சந்திக்கு அருகாமையில் வர்த்தக நிலையமொன்றில் மூன்றாம் தளமானது பிரதேச சபையின் அனுமதியின்றி கட்டப்பட்டுள்ளது.
அது தொடர்பில் பிரதேச சபையினால் கடந்த ஜனவரி மாதம் கட்டட உரிமையாளருக்கு எதிராக யாழ்ப்பாணம் மேலதிக நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டது
வழக்கு விசாரணைகளின் அடிப்படையில் அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டத்தின் மூன்றாம் தளத்தினை பிரதேச சபையினால் இடித்து அழிக்க அனுமதியளித்த மன்று , அதற்கான செலவீனத்தை கட்டட உரிமையாளர் பிரதேச சபைக்கு செலுத்த வேண்டும் எனவும் , 30 ஆயிரம் ரூபாய் தண்டப்பணம் செலுத்த வேண்டும் எனவும் மன்று தீர்ப்பளித்துள்ளது.
You might also like

Leave A Reply

Your email address will not be published.