;
Athirady Tamil News

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் சீனாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம்

0

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் சீனாவின் பீஜிங் நகரைச் சென்றடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த விஜயத்தின் போது அவர் சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்கை சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ரஷ்ய ஜனாதிபதியின் இந்த விஜயத்தை முன்னிட்டு பீஜிங் நகரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தனது சீன விஜயத்தை நிறைவு செய்து ஒரு வாரம் நிறைவடைவதற்குள், இந்த ராஜதந்திர விஜயம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.