;
Athirady Tamil News

உறவினர்களுடன் சென்ற தமிழர் பகுதி சிறுமிக்கு நொடிப்பொழுதில் நடந்தேறிய துயரம்; கதறும் பெற்றோர்

0

வவுனியா செட்டிகுளம் பகுதியைச் சேர்ந்த மூன்று வயது சிறுமி ஒருவர் இரசாயன திரவமொன்றை குடித்த நிலையில் உயிரிழந்துள்ளாதாக தெரிவிக்கப்படுகின்றது.

கம்பளை, புப்புரஸ்ஸ பகுதியில் வவுனியாவிலிருந்து உறவினர்களுடன் வந்திருந்த மூன்று வயது சிறுமி ஒருவர் தண்ணீர் என நினைத்து இரசாயன திரவமொன்றை குடித்த நிலையில் உயிரிழந்துள்ளாதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலதிக விசாரணை
குடும்பத்தினர் அனைவரும் வீட்டிற்கு வெளியே இருந்த சமயத்தில், அச்சிறுமி வீட்டிற்குள் சென்று வைக்கப்பட்டிருந்த திரவத்தைத் தண்ணீர் என குடித்துள்ளார்.

இதனை தொடர்ந்து குறித்த சிறுமிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு, கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.எனினும் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பசுவின் பாலைப் பதப்படுத்தப் பயன்படுத்தப்படும் ரசாயனத்தைக் குடித்ததால் சிறுமி உயிரிழந்துள்ளதாக பிரேதப் பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.