;
Athirady Tamil News

யாழ்.போதனாவிற்கு மருந்துகளை ஏற்றி வந்த வாகனம் தடம்புரள்வு

0
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மருந்துகளை ஏற்றி வந்த வாகனம் கொக்காவில் பகுதியில் தடம்புரண்டுள்ளது 
கொழும்பில் இருந்து , யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மருந்துகளை ஏற்றி வந்த வாகனம் முல்லைத்தீவு, கொக்காவில் பகுதியில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை அதிகாலை தடம்புரண்டு விபத்துக்கு உள்ளாகியுள்ளது.
விபத்தில் சாரதி மற்றும் உடன் பயணித்த இரு ஊழியர்களும் , பாதுகாப்பாக உள்ளதாகவும், தடம்புரண்ட வாகனத்தில் இருந்த மருந்துகளை பாதுகாப்பாக இறக்கி, மற்றுமொரு வாகனத்திற்கு மாற்றி எடுத்து வர நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளப்பட்டதாக , வைத்தியசாலை பணிப்பாளர் த, சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
அதேவேளை குறித்த விபத்து சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்
You might also like

Leave A Reply

Your email address will not be published.