;
Athirady Tamil News

சிறுவன் வாயில் இரும்பு கம்பியால் சூடு வைத்த தந்தை

0

மட்டக்களப்பு, முறக்கொட்டான்சேனை பகுதியில் 8 வயது சிறுவன் ஒருவனின் வாயில் இரும்பு கம்பியால் சூடு வைத்த குற்றச்சாட்டில் குறித்த சிறுவனின் தந்தை வியாழக்கிழமை (28) கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பிரதேசத்திலுள்ள பாடசாலை ஒன்றில் தரம் 3 இல் கல்வி கற்று வரும் சிறுவன், வகுப்பறையில் தகாத வார்த்தைகளை பயன்படுத்தி வந்துள்ளான். இது தொடர்பாகச் சிறுவனின் பெற்றோரிடம் பாடசாலை ஆசிரியர் முறைப்பாடு செய்துள்ளார்.

தந்தை மகன் மீது கடும் கோபம்
இதனால் சிறுவனின் தந்தை மகன் மீது கடும் கோபமடைந்து, சிறுவனைப் பிடித்து, இரும்பு கம்பியை சூடாக்கி அவனது வாயில் கொடூரமான முறையில் சூடு வைத்துள்ளார். சிறுவனுக்கு நேர்ந்த இக்கொடூரம் குறித்து அப்பகுதி கிராம உத்தியோகத்தருக்குத் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, அவர் வியாழக்கிழமை (28) அன்று சந்திவெளி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இம்முறைப்பாட்டினை தொடர்ந்து, சிறுவனின் தந்தையைப் பொலிஸார் கைது செய்ததுடன், பாதிக்கப்பட்ட சிறுவனை மீட்டு சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக சந்திவெளி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.