;
Athirady Tamil News

சென்னையில் இலங்கை பெண்ணை கார் ஏற்றி கொன்ற கும்பல்: மதுபான பாருக்கு சீல்

0

சென்னையில் இலங்கை பெண்ணை கார் ஏற்றி கொன்ற சம்பவத்தில் தொடர்புடைய மதுபான பாருக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

சென்னையில் இலங்கை பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்
சென்னை கோயம்பேட்டில் உள்ள தனியார் பார் ஒன்றில் நடனம் ஆடும் போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் இலங்கை பெண் யான்சி மற்றும் சுமன் சக்திவேல் என்ற நபரின் குழுவினருக்கும் இடையே நேற்று  முன்தினம் மோதல் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து இரண்டு தரப்பினரையும் பாரில் இருந்து பவுன்சர்கள் வெளியேற்றியுள்ளனர். இதனால் தனது தோழிகளுடன் யான்சி தன்னுடைய இருசக்கர வாகனத்தில் அங்கிருந்து புறப்பட்டுள்ளார்.

அப்போது யான்சியை காரில் துரத்திய குழுவினர், யான்சி மீது வேகமாக காரை மோதியுள்ளனர்.

இதனால் இருசக்கர வாகனத்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட யான்சி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அவருடன் இருந்த சிறுமிக்கு பலத்த காயங்கள் ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தனியார் பாருக்கு சீல்
இந்நிலையில் இலங்கை பெண் யான்சி கார் ஏற்றிக் கொல்லப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய கோயம்பேடு தனியார் மதுபான பாருக்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.

காரை ஏற்றி யான்சி கொன்ற கும்பல், பொலிஸாரிடம் மாட்டிக் கொள்வோம் என்ற அச்சத்தில் கோயம்பேடு பூண்டு மார்க்கெட்டுக்குள் தங்கள் காரை நிறுத்தி அதில் இருந்த திமுக கொடி மற்றும் நம்பர் பிளேட்டை கழட்டிவிட்டு தப்பியோடியுள்ளனர்.

ஆனால் துரிதமாக செயல்பட்ட காவல்துறை முக்கிய குற்றவாளியான சுமன் சக்திவேல் மற்றும் அவரது நண்பர்கள் 7 பேரையும் அதிரடியாக கைது செய்துள்ளது.

பாலகுரு, கிஷோர், சுமன், விமல், மோகன சுந்தரம், ராகுல், ஜோஷ்வா ஆகிய 7 பேரை தற்போது பொலிஸார் கைது செய்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.