;
Athirady Tamil News

யாழில் பொலிசார் அதிரடி ; 8 இளைஞர்களின் மோசமான செயல் அம்பலம்

0

யாழில் போதை மாத்திரைகள் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் 8 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அச்சுவேலி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் சம்பத் ஹீங்கந்த தெரிவித்தார்.

அச்சுவேலி பொலிஸ் நிலைய புலனாய்வு பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய மேற்கொண்ட சுற்றுவளைப்பு நடவடிக்கையின் போது சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் நேற்றைய தினம்(1) கைது செய்யப்பட்டுள்ளதாக அச்சுவேலி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார். சந்தேக நபர்கள் ஆவரங்கால் சந்தி பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சந்தேக நபர்கள் 8 பேரில் ஒருவர் 3 கிராம் ஐஸ் போதை பொருளை உடமையில் வைத்திருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் நவாலி, பூநகரி மானிப்பாய், ஆவரங்கால் பகுதியச் சேர்ந்த 24 வயது தொடக்கம் 30 வயதுடைய நபர்கள் என பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.