;
Athirady Tamil News

எபோலா பரவலுக்கு இடையே காங்கோவில் மீண்டும் விமான சேவை!

0

காங்கோ நாட்டில், எபோலா பரவலுக்கு இடையே அந்நாட்டின் முக்கிய விமான நிலையம் மீண்டும் விமான சேவைக்காகத் திறக்கப்பட்டுள்ளது.

காங்கோ உள்ளிட்ட ஆப்பிரிக்க நாடுகளில் எபோலா தொற்று வேகமாகப் பரவி வருகிறது. உகாண்டா, காங்கோ ஆகிய நாடுகளில் மட்டும் எபோலாவுக்கு இதுவரை 246 பேர் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இத்துரி மாகாணத்தின் புனியா நகரத்திலுள்ள காங்கோவின் முக்கிய விமான நிலையம் சுமார் 10 நாள்களுக்குப் பிறகு நேற்று (ஜூன் 2) விமான சேவைக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, எபோலா பரவலைக் கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், விமான சேவைகளை மீண்டும் தொடங்கும் சூழல் தற்போது நிலவுவதாகவும் காங்கோ அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, எபோலா பரவலால் காங்கோவில் மருத்துவ மற்றும் மனிதாபிமான உதவிகளுக்காக இயக்கப்படும் விமானங்களைத் தவிர மற்ற அனைத்து விதமான போக்குவரத்து விமானங்களின் சேவையும் கடந்த மே 23 அன்று நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.