நெடுந்தீவில் பல மில்லியன் ரூபா செலவில் வரலாற்றுச் சிறப்புமிக்க அபிவிருத்தித் திட்டங்கள் !
நீண்டகாலமாகப் புறக்கணிக்கப்பட்டிருந்த நெடுந்தீவுப் பகுதி தற்போது தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் “வளமான நாடு – அழகான வாழ்க்கை” என்ற தேசிய தொனிப்பொருளின்கீழ், விசேட அபிவிருத்திப் பாதையில் தடம் பதித்துள்ளது.
போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்னாயக்க நெடுந்தீவுக்கு நேரில் விஜயம் செய்து, அரசின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியின் மூலம் முன்னெடுக்கப்படும் பல்வேறு முக்கிய அபிவிருத்தித் திட்டங்களை முறைப்படி ஆரம்பித்து வைத்தார்.
நெடுந்தீவு மக்களின் நீண்டகால தேவையாக இருந்த நிரந்தர எரிபொருள் (பெற்றோல்) சேமிப்பு மற்றும் நிரப்பு நிலையம் அமைப்பதற்காக அண்மையில் அடிக்கல் நாட்டப்பட்டது.
இதன் பெறுமதி 40 மில்லியன் ரூபா ஆகும்.
நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் இதன் கட்டுமானப் பணிகளை நிறைவு செய்து மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் வட மாகாணத்திற்கும், குறிப்பாக நெடுந்தீவுக்கும் முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிக அளவிலான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
2025 வட பகுதி வீதி அபிவிருத்தித்தித் திட்டத்தின் கீழ் 20 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
2025இல் வடக்கின் மொத்த அபிவிருத்தி, 13 பில்லியன் ரூபாய் (13,000 இலட்சம்).
2025ஆம் ஆண்டை விடவும் அதிக நிதி 2026ஆம் ஆண்டில் வடக்கு அபிவிருத்திக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. நெடுந்தீவின் முழுமையான வளர்ச்சிக்கு மட்டும் கிட்டத்தட்ட 1000 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
தீவு மக்களின் இருப்பிட வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் புதிய வீடமைப்புத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன:
2025 ஆம் ஆண்டு – 27 வீட்டுத் திட்டங்கள்.
2026 ஆம் ஆண்டு – 18 வீட்டுத் திட்டங்கள்.
2025ஆம் ஆண்டின் கிராம அபிவிருத்தி வேலைத்திட்டங்களின் படி
பொட்டல்காளி வீதி, செபநாயகபுரம் கடற்கரை வீதி, நெல்வரை வேதனியார் வீதி, கட்டுராமன்சாலி வீதி, மெச்சன்வளவு வீதி, மகரதமொழியல் வீதி, அம்மாவோடை வீதி, கோணன்தோட்ட வீதி, மற்றும் நொலன் செனல் வீதி என்பனவும் மாவிலித்துறை – பெரியதுறை வீதி என்பனவும் புனரமைக்கப்பட்டன.
முதலாம் கட்டமாக (2025) வீதி அபிவிருத்தி திணைக்களத்தினால் 3.5 கி.மீ வீதி புனரமைக்கப்பட்டது.
இரண்டாம் கட்டமாக (2026), வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் 1.7 கி.மீ வீதி புனரமைக்கப்படவுள்ளது.2026ஆம் ஆண்டில் வீதிகளுக்கென விசேட நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
தீர்த்தக்கரை வீதி (0.960 – 1.660 கி.மீ).
சந்தை வீதி புனரமைப்பு.
சுற்றுலாப் பயணிகளையும் உள்ளூர் மக்களையும் கவரும் வகையில் பல்வேறு கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன:
17 மில்லியன் ரூபா செலவில், மாவிலித்துறை இறங்குதுறையில் பயணிகள் காத்திருப்பு மண்டபம் மற்றும் உணவகம் என்பன புனரமைக்ப்படுகின்றன.
8.9 மில்லியன் ரூபா செலவில், வரலாற்றுச் சிறப்புமிக்க பெருக்கு மரத்தைச் (Baobab Tree) சூழ விற்பனை நிலையங்கள், இருக்கைகள், புனரமைக்கப்பட்ட மலசலகூடங்கள் மற்றும் குடிநீர் வசதிகள், நெடுந்தீவு கடற்கரையில் பொதுக் குளியலறை வசதி என்பன மேம்படுத்தப்பட்டன.
தண்ணீர் பவுஸர் திருத்தம், புதிய கிணறு நிர்மாணித்தல், மழைநீர் சேகரிப்பு மற்றும் சுத்திகரிப்பு நிலைய விரிவாக்கம் (கட்டம் 2) எனபனவும் மேற்கொள்ள்ப்பட்டன
றோமன் கத்தோலிக்க பெண்கள் கல்லூரிக்கு புதிய வகுப்பறை கட்டிடம்.
திருஇருதய மற்றும் சென்.ஜோன்ஸ் முன்பள்ளிகள் புனரமைப்பு.
உதயசூரியன் விளையாட்டுக்கழக மைதான சீரமைப்பு. என்’பனவும் மேற்கொள்ளப்பட்டன.
பாராளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரனின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியின் மூலம் பல திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
முன்னெடுக்கப்பட்டவை:
புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலம் மின் உற்பத்தி (காற்றாலை மற்றும் சூரிய சக்தி பலகைகள்) மின்பிறப்பாக்கி வசதிகள்.
பிரதான போக்குவரத்துக்கான புதுப்பிக்கப்பட்ட பேருந்து வசதி எனபவை அவற்றுள் அடங்கும். .
கடற்றொழிலாளர்களுக்கான மலசலகூட வசதிகள், பெண்களின் சிறு கைத்தொழில் உற்பத்திகளுக்கான விற்பனை நிலையம் என்பன இவ்வருட இறுதிக்குள் மேற்கொள்ளப்படும். நெடுந்தீவு இறங்குதுறைக்கான சூரிய மின் ஒளிர்வு வசதிகள், நெடுந்தீவு மத்திய மகா வித்தியாலய மைதான புனரமைப்பு, நெடுந்தீவு மத்தி அலைகடல் சங்க எல்லை முதல் வலம்புரி சங்க எல்லை வரையிலான கடலரிப்பைத் தடுக்க கல்லணை திட்ட ஆய்விற்காக 10 மில்லியன் ரூபாய், ‘அலை அரசி’ படகு திருத்தத்திற்கான நிதிச் செலவீன மதிப்பீடு (70 இலட்சம் ரூபாய்).
குழந்தையேசு கடற்றொழில் சங்கக் கட்டிடத் திருத்த வேலைகள் (30 இலட்சம் ரூபாய்) என்பன மேற்கொள்ளப்படுகின்றன.. கடந்த கால அரசாங்கங்கள் யாழ்ப்பாணப் பகுதி அபிவிருத்திக்கு பெருந்தொகை நிதியைச் செலவிட்ட போதிலும், தீவகப் பகுதிகளின் அபிவிருத்தியில் போதிய கவனம் செலுத்தவில்லை. ஆனால், தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தீவகத்தின் மிக முக்கியமான நெடுந்தீவு மீது விசேட கவனம் செலுத்தி இவ்வளவு பெரிய அளவிலான அபிவிருத்திகளை முன்னெடுப்பது குறித்து நெடுந்தீவு மக்கள் தமது பெரு மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துள்ளனர்.