;
Athirady Tamil News

குடி நீரின்றி தவிக்கும் குச்சவெளி பள்ளவக் குள மக்கள்!

0

திருகோணமலை- குச்சவெளி பிரதேச செயலக பிரிவில் உள்ள பள்ளவக் குள மக்கள் குடி நீரின்றி தவிப்பதாக கவலை தெரிவிக்கின்றனர்.

சுமார் 2004 ஆம் ஆண்டு குடியேற்றப்பட்ட குறித்த பகுதி மக்கள் தற்போது வரை நிரந்தர குடி நீரின்றியே வாழ்ந்து வருவதாக கூறுகின்றனர்.

குச்சவெளி பிரதேச சபை மூலமாக பவுசர் மூலமாக குடி நீர் விநியோகிக்கப்பட்டு வந்த நிலையில் இரு மாதங்களாக அதுவும் இடை நிறுத்தப்பட்டுள்ளதாக அந்தப் பகுதி சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் குறிப்பிடுகின்றனர்.

குடி நீர் பிரச்சினை
இது குறித்து இன்று (12) குறித்த பகுதி ஜூம் ஆபள்ளி நிருவாகம்,கிராம அபிவிருத்தி சங்க பிரதிநிதிகள் கூட்டாக தெரிவிக்கையில், நாங்கள் குடி நீரின்றி தவிக்கிறோம்.பாடசாலை செல்லும் பிள்ளைகள் பெண்கள் என பலரும் கஷ்டங்களை இதன் மூலம் எதிர்நோக்குகிறார்கள்.

குச்சவெளி பிரதேச சபை மூலமாக குடி நீர் விநியோகம் செய்வதற்காக நிதி விடுவிக்கப்பட்ட போதிலும் இரு மாதங்களாக நீர் விநியோகிக்கவில்லை.

ஓரிரு வாரங்களுக்குல் குடி நீர் பிரச்சினையை தீர்க்காவிட்டால் பிரதேச செயலகம்,பிரதேச சபையை முற்றுகையிடுவோம் எனவும் தெரிவித்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.