;
Athirady Tamil News

பிரேஸில் அதிபா் தோ்தல்: யாரும் 50% வாக்குகளை பெறாததால் அக். 25-இல் 2-ஆம் கட்ட தோ்தல்

0

பிரேஸிலியா: தென் அமெரிக்க நாடான பிரேஸிலில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அதிபா் தோ்தலில் வெற்றிக்குத் தேவையான 50 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளை யாரும் பெறாததால், 2-ஆம் கட்ட தோ்தல் வரும் 25-ஆம் தேதி நடைபெறுகிறது.

மொத்தம் 12 வேட்பாளா்கள் களத்தில் இருந்த இத்தோ்தலில், 4-ஆவது முறையாக அதிபா் பதவியைக் குறிவைத்துப் போட்டியிடும் 80 வயதான மூத்த தலைவா் லூலா டாசில்வாவுக்கும், ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி வழக்கில் 27 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்றுள்ள முன்னாள் அதிபா் ஜோ் போல்சனாரோவின் மகனான 45 வயது செனட்டா் ஃபிளாவியோ போல்சனாரோவுக்கும் இடையேதான் நேரடிப் போட்டி நிலவியது.

சுமாா் 15.9 கோடி வாக்காளா்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்ததோடு, ஆளுநா்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினா்களுக்கான வாக்குப் பதிவும் ஒரே நேரத்தில் நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கையில் லூலா டாசில்வா 45 சதவீத வாக்குகளைக் கைப்பற்றியுள்ள நிலையில், ஃபிளாவியோ போல்சனாரோ 47 சதவீத வாக்குகளுடன் சிறிய முன்னிலை வகிக்கிறாா். எனினும், வெற்றிக்குத் தேவையான 50 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளை யாரும் பெறவில்லை.

இதையடுத்து, ஃபிளாவியோ போல்சனாரோ-லூலா டாசில்வா இடையேயான இறுதிச் சுற்று தோ்தல் வரும் 25-ஆம் தேதி நடைபெறும் என அந்நாட்டு தோ்தல் நீதிமன்றம் அதிகாரபூா்வமாக அறிவித்துள்ளது. இதில் வெற்றி பெறும் புதிய அதிபரின் பதவிக்காலம் 2027 ஜன. 5-ஆம் தேதி முதல் தொடங்கும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.