;
Athirady Tamil News

ஒப்பந்தத்தை மீறினால் குண்டுவீச்சை தொடங்குவோம் – ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை

0

டெஹ்ரான்,

ஈரான் ஒப்பந்தத்தை மீறினால் கடுமையான குண்டுவீச்சு தாக்குதலை நடத்துவோம் என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கூறியுள்ளார்.

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே நான்கு மாதங்களாக நடந்து வந்த கடுமையான போரை முடிவுக்குக் கொண்டு வர. அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மற்றும் ஈரான் தலைவர்கள் தற்காலிக புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் மின்னணு முறையில் கையெழுத்திட்டுள்ளனர். இந்த ஒப்பந்தம் நாளை (வெள்ளிக்கிழமை) சுவிட்சர்லாந்தில் உள்ள பர்கென்ஸ்டாக்கில் அதிகாரப்பூர்வமாக நேரில் கையெழுத்தாகிறது. இதன்மூலம் உலகளாவிய கச்சா எண்ணெய் மற்றும் சமையல் கியாஸ் வினியோகத்தில் ஐந்தில் ஒரு பங்கைத் தீர்மானிக்கும் முக்கியப் பாதையான ஹார்முஸ் நீரிணை, நாளை முதல் முழுமையாகத் திறக்கப்படும் என டிரம்ப் அறிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து அவர் மேலும் கூறுகையில், ஈரானுடனான பேச்சுவார்த்தைகளுக்காக 60 நாள் காலக்கெடுவை ஒரு கைமையான காலக்கெடுவாக கருதவில்லை. அவர்கள் சரியாக நடந்துகொள்ளும் வரை அதை பற்றி நான் பெரிதாக கவலைப்பட மாட்டேன். ஆனால் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தால் ராணுவ நடவடிக்கை எடுக்கப்படலாம். அவர்கள் இணங்கி வராவிட்டால் நாங்கள் குண்டுவீசுவோம் என்பது ஒரு மிரட்டல் என அதை நீங்கள் எப்படி வேண்டுமானாலும் அழைக்கலாம்.

ஆனால் அது பெரும்பாலும் நடக்கவே செய்யும். ஈரான் ஒப்பந்தத்தை மீறினால் கடுமையான குண்டுவீச்சு தாக்குதலை நடத்துவோம். அவர்கள் அப்படி செய்வதை நான் விரும்பவில்லை. அவர்கள் ஒப்பந்தத்தை மதிக்க வேண்டும் என்று விரும்புகிறேன் என்றார்.

கடந்த மூன்று மாதங்களாக மூடிக்கிடந்த இந்த கடல்வழிப் பாதையில், போர் ஏற்படுவதற்கு முந்தைய நிலை விரைவில் திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒப்பந்தம் கையெழுத்தான உடனே ஈரான் மீதான எண்ணெய் வர்த்தகத் தடைகளை நீக்க அமெரிக்கா ஒப்புக் கொண்டுள்ளது. இதன் மூலம் ஈரான் தனது கச்சா எண்ணெய் மற்றும் எரிபொருட்களை எந்தவிதக் கட்டுப்பாடும் இன்றி விற்கலாம்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.