;
Athirady Tamil News

புங்குடுதீவு ஸ்ரீ சுப்பிரமணிய மகளிர் வித்தியாலய வான் படை சாரணியர் மாணவிகளுக்கான *வான் சாரணிய சின்னம் சூட்டும் விழா

0

புங்குடுதீவு ஸ்ரீ சுப்பிரமணிய மகளிர் வித்தியாலய *வான் படை சாரணியர்* மாணவிகளுக்கான *வான் சாரணிய சின்னம் சூட்டும் விழா* இன்றையதினம் வித்தியாலய அதிபர் திருமதி.வனிதா அருட்செல்வன் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் திரு.மருதலிங்கம் பிரதீபன் (யாழ்.மாவட்ட ஆணையாளர் இலங்கை சாரணர் சங்கம், மாவடட செயலாளர் யாழ்ப்பாணம்) பிரதம விருந்தினராகக் கலந்து கொள்ள, சிறப்பு விருந்தினர்களாக திரு.நகுலேஸ்வரன் மஞ்சுதன் (சாரணர் உதவி மாவட்ட ஆணையாளர் தீவகம்), திரு.சந்திரசேகரன் ஜூயிந்தன் (கடற்சாரணர் உதவி மாவட்ட ஆணையாளர் தீவகம்) டொக்ரர்.திரு.தில்லைவாசன் (சாரணர் பிரதி மாவட்ட ஆணையாளர்) ஆகியோருடன் கௌரவ விருந்தினர்களாக புங்குடுதீவு மத்திய கல்லூரி அதிபர் திரு.விநோதன், வேலணை மத்திய கல்லூரி சாரண தலைவர், அமெரிக்க மிஷன் வித்தியாலய ஆசிரியர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இவர்களுடன் அவ்வித்தியாலய ஆசிரிய பெருந்தகைகள், மாணவச் செல்வங்கள், பெற்றோர்கள், நலன் விரும்பிகள் கலந்து சிறப்பித்தனர்.

தகவலுக்கு நன்றி🙏.. *பாடசாலை சமூகம்*🙏

You might also like

Leave A Reply

Your email address will not be published.