;
Athirady Tamil News

யாழில் 29 வயது இளைஞனுக்கு நடத்தப்பட்ட கொடூரம் ; பல நாட்களின் பின் குடும்பத்தை உலுக்கிய துயரம்

0

கடந்த சில தினங்களுக்கு முன்னர் கத்தி குத்து தாக்குதலுக்குள்ளான 29 வயதுடைய ஆணொருவர் சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை (27) யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தொல்புரம் பகுதியில் கடந்த 22 ஆம் திகதி கத்தி குத்து தாக்குதல் ஒன்று சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சிகிச்சை பலனின்றி பலி
இதன்போது வயிற்றில் படுகாயமடைந்த நபர் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு உயிரிழந்துள்ளார்.

குறித்த தாக்குதலை மேற்கொண்ட நபரை முன்பதாக வட்டுக்கோட்டை பொலிஸார் கைது செய்து மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்தியவேளை அவரை எதிர்வரும் ஜூலை மாாதம் 07 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.

இது குறித்து வட்டுக்கோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.