;
Athirady Tamil News

இன்று முதல் மூடப்படும் மதுபானசாலைகள் ; காத்திருக்கும் கடும் சட்ட நடவடிக்கை

0

பொசன் வாரத்தை முன்னிட்டு, இன்று (28) முதல் இந்த மாதம் 30 ஆம் திகதி வரை நாடு முழுவதும் உள்ள அனைத்து மதுபான சாலைகளையும் மூடுமாறு மதுவரித் திணைக்களம் உத்தரவிட்டுள்ளது.

அரசாங்கத்தினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள ‘பொசன் வாரத்தை’ முன்னிட்டு, இந்தத் தீர்மானம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

சட்ட நடவடிக்கை
இதேவேளை மிஹிந்தலை, மதவாச்சி, மற்றும் மஹாவிலச்சிய ஆகிய பிரதேச செயலகங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்து மதுபான சாலைகளும் , எதிர்வரும் ஜூலை மாதம் 2 ஆம் திகதி வரை தொடர்ந்து மூடப்பட்டிருக்கும்.

இந்த உத்தரவை மீறி மதுபான விற்பனையில் ஈடுபடும் உரிமம் பெற்றவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என திணைக்களம் எச்சரித்துள்ளது.

இதனை உறுதிப்படுத்துமாறு அனைத்து மதுவரித் திணைக்கள அதிகாரிகளுக்கும் பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவு மீறப்படுவது குறித்து பொதுமக்கள் 1913 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக, 24 மணிநேரமும் மதுவரித் திணைக்களத்தின் செயற்பாட்டு மையத்தைத் தொடர்புகொண்டு தகவல் தெரிவிக்க முடியும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.