யாழ்.பல்கலை பேராசிரியர் ரகுராம் தொடர்ந்த அவதூறு வழக்கு – திங்கட்கிழமைக்கு திகதியிடப்பட்டுள்ளது
;
இந்நிலையில் , முன்னாள் கலைப்பீடாதிபதி சிவசுப்ரமணியம் ரகுராம் குறித்த முன்னாள் மாணவியுடன் உரையடாடிய தொலைபேசி ஒலிப்பதிவு என சில ஒலிப்பதிவுகள் டிக்டோக் தளம் மற்றும் முகநூல்களில் பகிரப்பட்டன.
அதன் அடிப்படையில் சிலரால் முகநூல்களிலும் யூடியூப் தளத்திலும் கருத்துக்கள் பகிரப்பட்டன.
இந்நிலையிலையே , பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் , நிகழ்நிலை காப்பு சட்டத்தின் பிரிவு 20இன் கீழ் யாழ்ப்பாண பல்கலைக்கழக முன்னாள் கலைப்பீடாதிபதி சிவசுப்பிரமணியம் ரகுராமால் கடந்த முதலாம் திகதி வழக்கு தொடரப்பட்டுள்ளது அதில் 14 பேர் எதிர் மனுதாரர்களாக குறிப்பிடப்பட்டுள்ளனர்
குறித்த 14 பேரில் , சிவசுப்பிரமணியம் ரகுராம் மீது குற்றச்சாட்டை முன்வைத்துள்ள மாணவி , அவரது நண்பியான முன்னாள் மாணவி , யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் , ஆகியோருடன் இணைய இடையீட்டாளர்களாக யூடியூப் , டிக்டொக் , பேஸ்புக் ஆகியவை மனுதாரர் தொடர்பிலான தடை செய்யப்பட்ட கூற்றுக்களை பிரசுத்தமைக்கு எதிராகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது
குறித்த வழக்கில் நிபந்தனையுடனான கட்டளையை பிறப்பிப்பதா ? இல்லையா என்பதனை முடிவு செய்வதற்காக வழக்கினை இன்றைய தினம் வெள்ளிக்கிழமைக்கு திகதிக்கு மன்று திகதியிட்டு இருந்தது
அதன் அடிப்படையில் குறித்த வழக்கு இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட போது, எவ்வித கட்டளைகளும் வழங்கப்படாது , வழக்கினை எதிர்வரும் திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும் என மன்று திகதியிட்டுள்ளது.