;
Athirady Tamil News

யாழ்ப்பாணத்திற்கு பார்சலில் அனுப்பப்பட்ட வாசனை சவர்க்கரத்தினுள் போதைப்பொருள்

0
யாழ்ப்பாணத்திற்கு “பார்சல் சேர்விஸ்” ஊடாக வாசனை சவர்க்காரத்திற்குள் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்ட நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் , அவரிடம் இருந்து 7 கிராம் ஹெரோயின் போதைப்பொருளையும் பொலிஸார் மீட்டுள்ளனர். 
யாழ்ப்பாணத்திற்கு பார்சல் சேர்விஸ் ஊடாக போதைப்பொருள் கடத்தப்படுவதாக கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் ,  பொலிஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு இருந்தனர்.
அந்நிலையில் யாழ். நகர் பகுதியை அண்மித்த பகுதியில் உள்ள “பார்சல் சேர்விஸ் ” நடத்தும் வர்த்தக நிலையத்திற்கு வெளிமாவட்டத்தில் இருந்து சந்தேகத்திற்கு இடமான முறையில் வாசனை சவர்க்காரம் வந்துள்ளது.
அது தொடர்பில் பொலிஸார் அறிந்து , பார்சலை பெற வருகை தரவிருந்தவருக்கு காவல் இருந்து , அந்நபர் பார்சலை பெற வந்த போது , அவரை கைது செய்து , பார்சலை சோதனையிட்டுள்ளனர்.
அதன் போது பார்சலுக்குள் காணப்பட்ட சவர்க்கரத்தினுள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 7 கிராம் ஹெரோயின் போதைப்பொருளை பொலிஸார் மீட்டுள்ளனர்.
அதனை அடுத்து கைது செய்யப்பட்ட நபரை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன் , பார்சலை அனுப்பிய நபர் தொடர்பிலும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர் .
You might also like

Leave A Reply

Your email address will not be published.