;
Athirady Tamil News

சீனாவில் நிலச்சரிவு: 8 பேர் பலி, 34 பேரைக் காணவில்லை

0

சீனாவில் ஏற்பட்ட நிலச்சரிவுக்கு 8 பேர் பலியான நிலையில் 34 பேரைக் காணவில்லை.

தென்மேற்கு சீன நகரமான சோஃக்கிங்கில் வெள்ளிக்கிழமை காலை சுமார் 9 மணியளவில் நிலச்சரிவு ஏற்பட்டது. அப்போது, பெருமளவிலான பாறைகளும் மண்ணும் அடித்து வரப்பட்டு, 10-க்கும் மேற்பட்ட குடியிருப்பு கட்டடங்களைப் புதைத்ததாக அரசு நடத்தும் சின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

குடியிருப்பு கட்டடங்கள் புதைந்ததால், 1,100-க்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டனர். நிலச்சரிவைத் தொடர்ந்து சுமார் 1 கி.மீ சுற்றளவில் உள்ள பகுதிகளில் தண்ணீர், மின்சாரம் மற்றும் எரிவாயு விநியோகமும் துண்டிக்கப்பட்டது. சம்பவ இடத்தில் 800-க்கும் மேற்பட்ட மீட்புப் பணியாளர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

நிலச்சரிவில் இடிபாடுகளுக்கு இடையே சிக்கி இதுவரை 8 பேர் பலியாகினர். மேலும் 34 பேரைக் காணவில்லை. நிலச்சரிவு ஏற்பட்ட இடத்திற்கு அருகில் பல கட்டடங்கள் அமைந்திருந்தன. சுமார் ஐந்து மற்றும் 15 அடுக்கு மாடிகள் கொண்ட இரண்டு அடுக்குமாடி கட்டடங்கள் சேதமடைந்தன.

8,000-க்கும் மேற்பட்ட பேரிடர் நிவாரணப் பொருட்களை சோஃக்கிங் பகுதிக்கு அனுப்பியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மழையினால் ஏற்பட்ட இந்த நிலச்சரிவானது உஜியாங் ஆற்றின் ஒரு பகுதியின் அருகே நிகழ்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.