;
Athirady Tamil News

ஜனாதிபதி சட்டத்தரணி கே. வி. தவராசாவின் நிதியில் புங்குடுதீவில் வீதி மின்விளக்குகள்

0

ஜனாதிபதி சட்டத்தரணி கே. வி. தவராசாவின் நிதியில் புங்குடுதீவில் வீதி மின்விளக்குகள்

வேலணை பிரதேச சபை உறுப்பினரும் தமிழ்த்தேசிய பேரவையின் அங்கத்துவ கட்சியான ஜனநாயக தமிழரசு கட்சியின் பிரதி செயலாளருமான திரு. கருணாகரன் நாவலன் அவர்களின் ஏற்பாட்டில் நேற்றுமுந்தினம் புங்குடுதீவு பிரதேசத்தில் முதலாம் வட்டாரத்தில் நண்பர்கள் சனசமூக நிலையம் முன்பாகவும் மற்றும் சந்தையடி குளம் முன்பாகவும் , பதினொராம் வட்டாரத்தில் புங்குடுதீவு மத்திய கல்லூரி முன்பாகவும் , சென் சேவியர் சனசமூக நிலையம் முன்பாகவும் அதிக வெளிச்சம் தரக்கூடிய ஐந்து ( 150 W வோட்ஸ் LED ) மின்விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.

தமிழ்த்தேசிய பேரவையின் பிரமுகரும், ஜனநாயக தமிழரசு கட்சியின் தலைவரும், கௌரி சங்கரி தவராசா ஞாபகார்த்த அறக்கட்டளையின் நிறுவுனரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான கே. வி. தவராசா அவர்களின் ரூபாய் எழுபத்தையாயிரம் ( 75000) நிதியுதவியில் வீதிவிபத்துகளை தடுப்பதற்காகவும் , சுற்றுலாத்துறை சார்ந்தும் மற்றும் ஊரின் பாதுகாப்பு தேவை கருதியும் இந் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

வீதி விளக்குகளை பொருத்துவதற்கு உதவிய வேலணை பிரதேசசபையினருக்கும் நன்றிகள் தெரிவிக்கப்படுள்ளது.

1

You might also like

Leave A Reply

Your email address will not be published.