வடக்கு, கிழக்கு பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை ; மக்களே அவதானம்
நாட்டில் இன்று சனிக்கிழமை (18) சில இடங்களில் மனித உடலால் உணரப்படும் வெப்பமான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதன்படி கிழக்கு மாகாணத்திலும், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களிலும் வெப்பமான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
எச்சரிக்கை மட்டம்
இந்த எச்சரிக்கையின்படி, பகல் பொழுதில் சில இடங்களில் மனித உடலால் உணரப்படும் வெப்பநிலையானது ‘எச்சரிக்கை மட்டம்’ வரை அதிகரிக்கக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் பொதுமக்கள் போதியளவு நீர் அருந்துமாறும், முடிந்தவரை நீண்ட நேரம் நேரடியாக சூரிய ஒளியில் இருப்பதைத் தவிர்க்குமாறும், நாளின் அதிக வெப்பம் நிலவும் நேரங்களில் கடினமான வெளிப்புற நடவடிக்கைகளைக் குறைத்துக் கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.