;
Athirady Tamil News

9 மாத பெண் குழந்தையின் உயிரை பறித்த கோர விபத்து ; வைத்தியசாலையில் 3 சிறுமிகள்

0

தம்புள்ள – ஹெட்டிபொல வீதியின் கலேயாய பகுதியில் லக்கல களுகங்கை நீர்த்தேக்க வீதியிலிருந்து பிரதான வீதிக்கு வந்த கெப் வாகனம், சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து மதகுடன் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

விபத்தில் சிக்கிய வாகனத்தில் சாரதி உட்பட 10 பேர் பயணித்துள்ளமை தெரியவந்துள்ளது.

இவ்விபத்தில் காயமடைந்த மூவர் மற்றும் 3 சிறுமிகள் லக்கல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது கொட்டியாகல பகுதியைச் சேர்ந்த 9 மாத பெண் குழந்தை உயிரிழந்துள்ளது.

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.