யாழ்.நூலகம் எரிக்கப்பட்டது தொடர்பில் வருந்திக்கொண்டிருக்க முடியாது
யாழ்ப்பாண நூலகம் தீக்கிரையாக்கப்பட்டது தொடர்பில் நாம் இன்றும் வருந்தி கொண்டிருப்பது மட்டும் நமது பணியாக இருக்காது. அதனை மீள கட்டியெழுப்ப வேண்டும் என்றே எமது அரசாங்கம் 100 மில்லியன் ரூபாயை ஒதுக்கியுள்ளது என புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஹினிதும சுனில் செனவி தெரிவித்துள்ளார்.
எமது அரசாங்கம் அமைக்கப்பட்ட பிறகு முதலாவது வரவு செலவுத் திட்டத்தின் மூலம், ஜனாதிபதி யாழ்ப்பாண நூலகத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு, 100 மில்லியன் ரூபாயை ஒதுக்கினார்.
நூலகத்திற்குத் தேவையான தளபாடங்கள், டிஜிட்டல் மயமாக்கலுக்கு தேவையான கணினிகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. மேலும், ஒரு நவீன கேட்போர்கூடம் முழுமையாகத் தயார்படுத்தப்பட்டுள்ளது.
பேராசிரியர் நுஃமான் உள்ளிட்ட அறிஞர்கள் இந்த நூலகம் தீக்கிரையாக்கப்பட்டது குறித்து எழுதிய கவிதை எனக்கு நினைவுக்கு வருகிறது.