பொருளாதார நெருக்கடியில் தவிக்கும் கியூபாவுக்கு ரூ.965 கோடி மனிதாபிமான உதவித் திட்டம் அறிவித்த அமெரிக்கா
வாஷிங்டன்,
அமெரிக்காவுக்கும், கியூபாவுக்கும் இடையே நீண்ட காலங்களாகப் பகை நீடித்து வருகிறது. கியூபா அரசுக்கு எதிராக அமெரிக்கா பல்வேறு பொருளாதார தடைகளையும் விதித்துள்ளது. இதனால் கியூபாவில் கடுமையான உணவுப் பற்றாக்குறையும், மின்சாரத் தடையும் ஏற்பட்டு மக்கள் தவித்து வருகின்றனர்.
உதவி திட்டம்
இந்த நிலையில், அங்குள்ள சாமானிய மக்களுக்கு உதவும் வகையில் அமெரிக்கா சுமார் ரூ.965 கோடி (100 மில்லியன் டாலர் மதிப்பிலான பிரமாண்ட மனிதாபிமான உதவி திட்டத்தை அறிவித்துள்ளது. இதன் முதல் கட்டமாக, உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய முதல் உதவி விமானத்தை அமெரிக்கா கியூபாவுக்கு அனுப்பியது.
இந்த உதவிகள் கியூபா அரசிடம் ஒப்படைக்கப்படாது என்றும், அங்குள்ள கத்தோலிக்க தேவாலய அமைப்புகள் மூலம் நேரடியாக ஏழை மக்களுக்கு திருட்டுப்போகாமல் வினியோகிக்கப்படும் என்றும் அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்.