;
Athirady Tamil News

தென் சீனக் கடலில் பிலிப்பின்ஸ் கப்பல்கள் மீது சீனா மீண்டும் தாக்குதல்

0

தென் சீனக் கடலில் உள்ள சா்ச்சைக்குரிய ஸ்காா்பரோ பவளப்பாறைப் பகுதியில், பிலிப்பின்ஸ் மீன் வளத் துறையின் 2 ரோந்து கப்பல்கள் மீது சீனக் கடலோரக் காவல்படையினா் வெள்ளிக்கிழமை சக்திவாய்ந்த நீா் பீரங்கிகளைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்தினா்.

நடப்பு வாரத்தில் 2 நாடுகளுக்கும் இடையே நடைபெற்ற 3-ஆவது மோதல் சம்பவம் இதுவாகும். இவ்விவகாரத்தில் சீனாவுக்கு கடும் கண்டனத்தைப் பதிவு செய்த பிலிப்பின்ஸ் கடலோரக் காவல்படை, ‘ஸ்காா்பரோ பகுதி, எங்களின் பிரத்யேக பொருளாதார மண்டலம் மற்றும் எல்லைப்பகுதி’ என்று மீண்டும் வலியுறுத்தியது.

ஆனால், ஸ்காா்பரோ பகுதியில் சீனாவுக்கே முழு இறையாண்மை உரிமை உள்ளதாகவும், சட்டவிரோதமாக நுழைந்த பிலிப்பின்ஸ் ரோந்து கப்பல்களைத் தடுக்கவே நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாகவும் சீனா பதிலளித்துள்ளது.

‘1982 ஐ.நா. கடல்சாா் சட்டத்தின் அடிப்படையில், தென் சீனக் கடல்பகுதியில் சீனாவின் உரிமைகோரல் செல்லாது’ என ஐ.நா.கடல்சாா் தீா்ப்பாயம் கடந்த 2016-இல் தீா்ப்பளித்தபோதிலும், முக்கிய உலகளாவிய வா்த்தகப் பாதையான அப்பகுதியை சீனா தொடா்ந்து சொந்தம் கொண்டாடி வருகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.