;
Athirady Tamil News

சுவிஸ் – புங்குடுதீவு ஒன்றியத்தினரால் புங்குடுதீவில் சிரமதானம் முன்னெடுப்பு

0

சுவிஸ் – புங்குடுதீவு ஒன்றியத்தினரால் புங்குடுதீவில் சிரமதானம் முன்னெடுப்பு

புங்குடுதீவு ஜே/ 25 கிராம அபிவிருத்தி சங்கத்தின் ( RDS) தலைவர் திரு. கருணாகரன் குணாளன் அவர்கள் முன்வைத்த வேண்டுகோளுக்கிணங்க
சுவிட்சர்லாந்து – புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின் ரூபாய் 80000 நிதியுதவியில் புங்குடுதீவு ஆலடி சந்தியிலிருந்து சின்ன ஆலடி வரையிலான இரண்டு கிலோமீட்டர் நீளமான வீதியில் சிரமதானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
வீதியின் இருமருங்கிலும் முட்பற்றைகள் நிறைந்திருந்தமையால் சீரான போக்குவரத்திற்காகவும், பொதுமக்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் நோக்கிலும் ஜேசிபி இயந்திரத்தின் துணையுடன் குறித்த சிரமதானப்பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த சிரமதான நிகழ்வில் இந்து மத குருக்கள் முரளி சர்மா, சூழகம் அமைப்பின் செயலாளர் கருணாகரன் நாவலன் மற்றும் பல பொதுமக்களும் கலந்துகொண்டனர்.

மேற்படி பிரதேசத்திலேயே 2015 ம் ஆண்டு மாணவி வித்தியா படுகொலை செய்யப்பட்ட நிலையில் அவரது சடலம் கண்டுபிடிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதுபோன்று புங்குடுதீவின் ஏனைய பகுதிகளிலும் சுவிஸ் – புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தினரால் தொடர்ச்சியாக சிரமதானப் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.