;
Athirady Tamil News

மேற்கு கரையில் துப்பாக்கி சூடு: 5 பேர் உயிரிழப்பு

0

ஜெருசலேம்,

காசாவில் இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன கிளர்ச்சிப்படையான ஹமாஸ் இடையில் நடைபெற்று வந்த போரானது கடந்த 2025 அக்டோபர் 10-ந்தேதி முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது. இருதரப்பும் போர்நிறுத்த ஒப்பந்தங்களை ஏற்றுக்கொண்டதன் மூலம் இந்த முடிவு எட்டப்பட்டதாகக் கூறப்பட்டது. ஆனால், போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி காசா மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகிறது.

இந்த நிலையில், காசாவின் மேற்கு கரையில் உள்ள நப்லஸ் பகுதி அருகே நடந்த துப்பாக்கி சூடு தாக்குதலில் பாலஸ்தீனத்தை சேர்ந்த 4 பேர் மற்றும் இஸ்ரேலை சேர்ந்த ஒருவர் என மொத்தம் 5 பேர் உயிரிழந்துள்ளனர். காயமடைந்த 4 பாலஸ்தீனியர்களுக்கு சிகிச்சை அளித்து வருவதாகவும், அவர்களில் 3 கவலைக்கிடமான நிலையில் இருப்பதாகவும் பாலஸ்தீனிய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அதே சமயம், காயமடைந்த 2 இஸ்ரேலியர்கள் மேற்கு கரையில் உருந்து விமானம் மூலம் மீட்கப்பட்டுள்ளனர் என இஸ்ரேல் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த துப்பாக்கி சூடு தாக்குதலுக்கான காரணம் குறித்து உடனடி தகவல்கள் வெளியாகவில்லை. இஸ்ரேல் படைகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள இந்தப் பகுதியில் சமீப காலமாக வன்முறை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.