;
Athirady Tamil News

நுவரெலியா செல்லும் சாரதிகளுக்கு எச்சரிக்கை

0

சீரற்ற வானிலை காரணமாக நுவரெலியாவில் பனிமூட்டம் நிலவி வருவதால், பிரதான வீதிகளில் பயணிக்கும் வாகன சாரதிகள் எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டும் என பொலிஸார் அறிவிறுத்தியுள்ளனர்.

நுவரெலியா, கந்தப்பளை, இராகலை, நானு ஓயா, டொப்பாஸ் போன்ற பிரதேசங்களில் பனி மூட்டம் கடந்த இரண்டு தினங்களாக காலை மற்றும் மாலை வேளையில் வழமைக்கு மாறாக அதிகரித்து காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நுவரெலியா – பதுளை பிரதான வீதி ,நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதியில் மற்றும் நுவரெலியா – கண்டி பிரதான வீதியில் டொப்பாஸ் தொடக்கம் லபுக்கலை பிரதேசம் வரை கடும் பனி மூட்டம் காணப்படுகின்றன .

இதனால் அவ் வீதியில் மிக அவதானத்துடன் வாகனம் செலுத்துமாறும் , ஆபத்தான பகுதிகளில் வாகனங்களின் முன் விளக்குகளை ஒளிரச் செய்யுமாறும் சாரதிகளுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.