;
Athirady Tamil News

தமிழீழ மக்கள் விடுதலைக் கழக ( ஐ.இ ) கிளையின் 37வது வீரமக்கள் தினம்

0

தமிழீழ மக்கள் விடுதலைக் கழக ( ஐ.இ ) கிளையின் 37வது வீரமக்கள் தினம் 09.08.26 ஞாயிற்றுக்கிழமை லண்டன் நோத்ஹோல்ட் கொமியுனீட் சென்ரறில் சிறப்பான மக்கள் நினைவு தினமாக நடைபெற்றது. ஐக்கிய இராச்சியக் கிளைப் பொறுப்பாளர் தோழர் நேதாஜி அவர்களின் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வு, செயலாளர் தோழர் சுகந்தனின் வரவேற்புரை மற்றும் மெளன அஞ்சலியுடன் ஆரம்பமானது. பெரும்பாலான கழகத் தோழர்களும், தமிழீழ விடுதலை இயக்கம் ( TELO ), ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி ( EPRLF ), ஈழப் புரட்சி அமைப்பு ( EROS ), மற்றும் இடதுசாரி அமைப்புக்களின் பொறுப்பாளர்கள், பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் பலரும் பங்குபற்றியும் உரையாற்றியும், மலர் அஞ்சலி செலுத்தியும் அஞ்சலி நிகழ்வினை தோழமையுடன் சிறப்பித்தார்கள். இராப்போசனத்தின் பின்னர், சுமார் 25க்கும் மேற்பட்ட கழகத் தோழர்கள் மத்தியில் ஐக்கிய இராச்சியக் கிளையின் புதிய நிர்வாகக்குழு உறுப்பினர்கள் மற்றும் ஆலோசனைக் குழு உறுப்பினர்களும் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

நிர்வாகக் குழு விபரம் :

பொறுப்பாளர்
தோழர் வேந்தன்,
செயலாளர்
தோழர் டயா மயூரன்,
பொருளாளர்
தோழர் சோபி,
சமூக மேம்பாட்டுக் கழக பொறுப்பாளர்
தோழர் சுகந்தன்,
தோழர் துளசி
தோழர் பாபு
தோழர் சத்தியா
தோழர் ஏகே
தோழர் ஸ்கந்தா
தோழர் அல்வின்
தோழர் முரளி

ஆலோசனைக் குழு

தோழர் முத்து
தோழர் சம்பந்தன்
தோழர் மகேசன்
தோழர் கேசவன்
தோழர் நேதாஜி
தோழர் முகுந்தன்
தோழர் கமலி

மத்திய குழு உறுப்பினர்
தோழர் சிவபாலன்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.