;
Athirady Tamil News

கிரகரி ஏரியில் நடந்த விபத்து..! சிறுவர்களின் உயிரைக்காத்த கடற்படையினர்

0

நுவரெலியா கிரிகரி ஏரியில் ஜெட்ஸ்கி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் நீரில் மூழ்கும் அபாயத்தில் இருந்த 11 மற்றும் 13 வயதுடைய இரு சிறுவர்களை இலங்கை கடற்படையினர் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.

இந்த சம்பவம் நேற்று (16) கிரிகரி ஏரியில் நீர் விளையாட்டில் ஈடுபட்டிருந்தபோது இடம்பெற்றுள்ளது.

உயிர்காக்கும் பணி
கிரிகரி ஏரியில் உயிர்காக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த இலங்கை கடற்படையின் Rapid Response Rescue and Relief Unit (4RU) பிரிவைச் சேர்ந்த கடற்படையினர், சம்பவத்தை நேரில் கண்டு உடனடியாக மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இதன்போது, நீரில் மூழ்கும் அபாயத்தில் இருந்த இரு சிறுவர்களையும் கடற்படையினர் மீட்டு பாதுகாப்பாக கரைக்கு அழைத்து வந்துள்ளனர்.

மீட்கப்பட்ட சிறுவர்கள் இருவரும் மினுவாங்கொடை பகுதியைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீட்பு நடவடிக்கையின் பின்னர், இரு சிறுவர்களும் மேலதிக நடவடிக்கைகளுக்காக நுவரெலியா பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.