;
Athirady Tamil News

ருமேனியா வான்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்த டிரோனை சுட்டு வீழ்த்திய நேட்டோ போர் விமானம்

0

புக்காரெஸ்ட்,

ஐரோப்பாவில் அமைந்துள்ள நாடு ருமேனியா. இந்நாடு மால்டோவா, உக்ரைன், ஹங்கேரி, செர்பியா, பல்கேரியா ஆகிய நாடுகளை எல்லைகளாக கொண்டுள்ளது.

ருமேனியா நேட்டோ அமைப்பில் உறுப்பினராகவும் உள்ளது. இதனால், நேட்டோ படையினர் அந்நாட்டில் நிலைநிறுத்தப்பட்டுள்ளனர்.

சுட்டு வீழ்த்தப்பட்ட டிரோன்

இந்நிலையில், ருமேனியா வான்பரப்புக்குள் இன்று அதிகாலை அத்துமீறி டிரோன் நுழைந்துள்ளது. இந்த டிரோன் மால்டோவா நாட்டில் இருந்து ருமேனியாவுக்குள் நுழைந்துள்ளது. இதையடுத்து பாதுகாப்புப்பணியில் இருந்த நேட்டோ அமைப்பின் போர் விமானம் அந்த டிரோனை நடுவானில் சுட்டு வீழ்த்தியது.

நேட்டோ அமைப்பில் இடம்பெற்றுள்ள ஸ்பெயின் நாட்டுக்கு சொந்தமான எப்-18 ரக போர் விமானம் அந்த டிரோனை சுட்டு வீழ்த்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக பாதுகாப்புப்படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.