வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்படும் அஸ்வெசும கொடுப்பனவு! அறிவிக்கப்பட்டது திகதி
ஓகஸ்ட் மாதத்திற்கான அஸ்வெசும கொடுப்பனவுகள் வரும் 19 ஆம் திகதி பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.
இது தொடர்பாக நலன்புரி நன்மைகள் சபை அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
வரவு வைக்கப்படவுள்ள பணம்
அதன்படி, நலன்புரி நிவாரணத் திட்டத்தின் முதல் கட்டத்தின் கீழ் 999,502 பயனாளிக் குடும்பங்களின் வங்கிக் கணக்குகளில் 9,241,892,500 ரூபாய் வரவு வைக்கப்படவுள்ளது.
அதனைத் தொடர்ந்து, இரண்டாம் கட்டத்தின் கீழ் 212,955 பயனாளிக் குடும்பங்களுக்கு 2,321,735,000 ரூபாய் தொகையை வழங்குவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.