;
Athirady Tamil News

லக்னோ: மனை​வி, சகோதரியை கொன்று வங்கி அதிகாரி தற்கொலை

0

லக்னோ: மனை​வி, சகோ​தரியை சுட்​டுக் கொன்ற வங்கி அதிகாரி துப்​பாக்​கி​யால் சுட்டு தற்கொலை செய்து கொண்​டார்.

உத்தர பிரதேச மாநிலம் லக்னோவை சேர்ந்​தவர் மனஸ் பாஜ்பாய். எஸ்​பிஐ வங்​கி​யில் அதி​காரி​யாக பணி​யாற்றி வந்​தார். இவரது மனைவி திவ்யா மிஸ்​ரா, ஐசிஐசிஐ வங்​கி​யில் மேலாளராக பணி​யாற்றி வந்​தார். குடும்ப தகராறு காரண​மாக கணவன் மனைவி இரு​வரும் கடந்த ஓராண்​டாக பிரிந்து வாழ்ந்து வந்​தனர். இவர்​களின் விவாகரத்து வழக்கு நீதி​மன்​றத்​தில் நிலு​வை​யில் உள்ளது.

இந்தநிலையில், மனைவி திவ்யா வேலை பார்க்கும் ஐசிஐசிஐ வங்கிக்கு நேற்று காலை சென்ற மனஸ் அவரை துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் அங்கிருந்து வீட்டுக்கு திரும்பிய மனஸ், உடல் நலம் பாதிக்கப்பட்ட தனது சகோதரியை சுட்டுக்கொலை செய்துவிட்டு, தன்னை தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தற்​கொலைக்கு முன்​பாக மனஸ் தனது செல்​போனில் வாட்​ஸ்​அப் செயலி​யில் ஒரு குறிப்பை எழுதி வைத்​திருந்​தார். அதில்​,“என் மனைவி என்னை ஏமாற்​றிய​தால் அவரை சுட்​டுக் கொலை செய்தேன். இப்​போது என் சகோ​தரியை கொலை செய்​து​விட்​டு, நானும் தற்​கொலை செய்​து​கொள்ள போகிறேன். என்ன நடந்​தது என்​பது என் மனை​வி​யின் சகோ​தரி பிராக்​யா​வுக்கு தெரி​யும்.” என குறிப்​பிட்​டுள்​ளார். திவ்​யா​வின் சகோ​தரி பிராக்யா பிரபல யூடியூபர் என்​பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.