;
Athirady Tamil News

வாகனங்கள் , உந்துருளிகள் திருட்டு சம்பவங்கள் அதிகரிப்பு; பொலிசார் எச்சரிக்கை

0

வாகன ஓட்டுநர்கள் மற்றும் உந்துருளிகளின் பயணிகள் வாகனங்களை கவனிக்காமல் விட்டுச் செல்வதால், வாகனங்கள் மற்றும் உந்துருளிகள் திருடப்படும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக இலங்கை காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.

இந்தநிலையில், வாகனங்களுக்குள் வைக்கப்பட்டிருந்த முக்கிய ஆவணங்கள் மற்றும் பொருட்களும் திருடப்பட்டுள்ளதாகவும் காவல்துறை ஊடகப் பேச்சாளர் எப்.யு. வூட்லர் தெரிவித்துள்ளார்.

பொதுமக்கள் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்
குறிப்பாக, சில முச்சக்கர வண்டி ஓட்டுநர்கள் மற்றும் உந்துருளி ஓட்டுநர்கள் இயந்திரம் இயக்கிய நிலையிலேயே வாகனத்தை விட்டுச் செல்வதாகவும், இதனை பயன்படுத்தி குற்றவாளிகள் வாகனங்களை திருடுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்தநிலையில், இரவு நேரங்களில் அல்லது ஆள் நடமாட்டம் குறைந்த இடங்களில் வாகனங்களை நிறுத்தும்போது பொதுமக்கள் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் காவல்துறையினர் கோரியுள்ளனர்.

வாகனம் திருடப்பட்டால் உடனடியாக 119 அல்லது 118 காவல்துறையின் அவசர தொலைபேசி இலக்கங்களுக்கோ, அல்லது அருகில் உள்ள காவல் நிலையத்துக்கோ தகவல் தெரிவிக்குமாறும் காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.