;
Athirady Tamil News

சடையம்மா சித்தரின் 95ஆவது குருபூசை

0
ஈழத்தின் பெண் சித்தரான சடையம்மா சித்தரின் 95ஆம் ஆண்டு குருபூசை நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
“பசி என்று வந்தவர்க்கு முகம் கோணாது உணவளிப்பதே மிகச்சிறந்த பூஜை”  என நாடி வருவோருக்கு உணவளித்து வந்த சடையம்மா சித்தர் 1931ஆம் ஆண்டு ஆவணி மாதம் 21ஆம் திகதி அனுச நட்சத்திரத்தில் முத்தியடைந்தார்.

குருபூசை தினமான நேற்றைய தினம் , கீரிமலையில் உள்ள அவரது சமாதி கோவிலில் விசேட பூஜைகள் இடம்பெற்று , அன்னதான நிகழ்வும் நடைபெற்றது .

அதேவேளை , நல்லூர் ஆலய சூழலிலும் கதிர்காமத்திலும் உணவு பொதிகளும் வழங்கி வைக்கப்பட்டன.

 
You might also like

Leave A Reply

Your email address will not be published.