;
Athirady Tamil News

சூரியனின் தெற்கு நோக்கிய நகர்வு! செப்டெம்பர் 7ஆம் திகதி வரை இலங்கையில் ஏற்படவுள்ள மாற்றம்

0

சூரியனின் தெற்கு நோக்கிய நகர்வு காரணமாக கடந்த ஆகஸ்ட் 28ஆம் திகதி முதல் செப்டெம்பர் 7ஆம் திகதி வரை இலங்கைக்கு அண்மையில் உள்ள அட்சரேகைகளுக்கு நேரடியாக மேலாக சூரியன் உச்சம் கொடுத்து வருகிறது.

அதன்படி, இன்று (30.08.2026) நண்பகல் 12.11 மணியளவில் மன்னார், பெரியமடு, புளியங்குளம், வெலிஓயா மற்றும் புல்மோட்டை ஆகிய பகுதிகளுக்கு நேரடியாக மேலாக சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்
இதேவேளை நாட்டின் பல பகுதிகளில் இன்று பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

அதன்படி, ஊவா மாகாணத்திலும் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, சப்ரகமுவ மாகாணத்திலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும்.

வறண்ட வானிலை
மேல் மற்றும் வடமேல் மாகாணங்களில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என்பதுடன், நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக வறண்ட வானிலை நிலவும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகள், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்கள், அத்துடன் திருகோணமலை, மொனராகலை, ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தளை மாவட்டங்களில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40 முதல் 50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசுவதுடன், மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடும். எனவே, இதனால் ஏற்படக்கூடிய ஆபத்துகளைக் குறைத்துக் கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.