;
Athirady Tamil News

வீட்டருகே இரவில் நடந்த மோதல் – 17 வயது மாணவருக்கு நேர்ந்த பரிதாபம்

0

எஹெலியகொட – எரெபொல பகுதியில் நடந்த கத்திக்குத்து சம்பவத்தில் 17 வயது பாடசாலை மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் இன்று(30.08.2026) இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எரெபொலபாடசாலைக்கு அருகே தனது நண்பனுடன் உரையாடிய காணொளி தொடர்பாக, உயிரிழந்த மாணவர் அப்பகுதியைச் சேர்ந்த மற்றொரு இளைஞருடன் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டுள்ளார்.

இரு தரப்பினருக்குள் வெடித்த மோதல்
இந்த பிரச்சினை முற்றியதை தொடர்ந்து, இரவில் மாணவனின் இல்லத்திற்கு அருகே இரு தரப்பினருக்கும் இடையே மற்றொரு மோதல் வெடித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

கத்திக்குத்து காயங்களால் படுகாயமடைந்த குறித்த மாணவர், எஹெலியகொட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட பின்னர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர், 17 வயதாகும் பாடசாலை மாணவர் என்றும் அடையாளப்படுத்தப்பட்டுள்ளார்.

இந்த சம்பவத்தில் தொடர்புடைய சந்தேக நபர் தற்போது அப்பகுதியிலிருந்து தப்பிச் சென்றுள்ள நிலையில், அவரைக் கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை எஹெலியகொட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.