;
Athirady Tamil News

பாண் உள்ளிட்ட பேக்கரி பொருட்களின் விலைகள் குறித்து வெளியான தகவல்

0

பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திகளின் விலைகள் தொடர்பில் நாளைய தினம் தீர்மானிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கோதுமை மாவின் விலை உயர்த்தப்பட்டதைத் தொடர்ந்து, உயர்த்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்த்தன தெரிவித்துள்ளார்.

இறுதி முடிவு
பிரீமா மற்றும் செரண்டிப் ஆகிய நிறுவனங்கள் ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலையை நேற்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் 17 ரூபாவினால் உயர்த்தியுள்ளன.

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழல் காரணமாக, கடந்த பெப்ரவரி மாதம் முதல் கப்பல் கட்டணங்கள், காப்பீட்டுக் கட்டணங்கள் மற்றும் தானியங்களின் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளதால் இந்த விலை திருத்தம் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

மாவின் விலை அதிகரிப்புக்கு ஏற்ப பேக்கரி உற்பத்திகளின் விலைகளை உயர்த்துவது தொடர்பான இறுதி முடிவு நாளை ஊடகங்களுக்கு அறிவிக்கப்படும் என சங்கத்தின் தலைவர் ஜயவர்தன குறிப்பிட்டுள்ளார்.

கோதுமா மாவின் விலை உயர்வினைத் தொடர்ந்து ஏற்கனவே சிற்றுண்டிகளின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.