;
Athirady Tamil News

உயரும் கடல் அலைகள் ; வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

0

புத்தளத்திலிருந்து கொழும்பு, காலி மற்றும் மாத்தறை ஊடாக பொத்துவில் வரையிலான கடற்பகுதிகளில் கடல் அலைகளின் உயரம் அதிகரிக்கும் சாத்தியக்கூறுகள் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதற்கமைய, குறித்த கடற்பகுதிகளில் கடல் அலைகள் சுமார் 2.0 முதல் 3.0 மீட்டர் வரை உயரக்கூடும்.

எச்சரிக்கை
இதன் காரணமாகச் சிலாபத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக மாத்தறை வரையிலான கடலோரப் பகுதிகளில் கடல் அலைகள் கரைக்கு வரக்கூடிய சாத்தியக்கூறுகளும் காணப்படுகின்றன.

எனவே, இக் கடற்பகுதிகளில் மீன்பிடி மற்றும் கடற்பயணங்களில் ஈடுபடும் சமூகத்தினரும், கடலோரப் பகுதிகளில் வாழும் மக்களும் இது குறித்து எச்சரிக்கையுடனும் அவதானத்துடனும் செயற்படுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கிழக்கு மாகாணம் மற்றும் பொலன்னறுவை, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மொனராகலை ஆகிய மாவட்டங்களுக்கு அதிக வெப்பமான வானிலை தொடர்பான எச்சரிக்கை அறிவித்தலும் விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதிகளில் பகல் வேளையில் மனித உடலால் உணரப்படும் வெப்பச் சுட்டெண் கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய மட்டத்தில் காணப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த எச்சரிக்கை அறிவித்தல்கள் அனைத்தும் நாளை திங்கட்கிழமை (31) ஆம் திகதிக்காகச் செல்லுபடியாகும் வகையில் விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.