;
Athirady Tamil News

டிசம்பர் முதல் இலங்கைக்கு வரும் புதிய விமான சேவை

0

எதிர்வரும் டிசம்பர் மாதம் முதல் இலங்கையையும் ரஷ்யாவின் சைபீரியப் பகுதியையும் இணைக்கும் புதிய சர்வதேச விமான சேவையைத் தொடங்க ரஷ்யாவின் முன்னணி விமான நிறுவனமான S7 ஏர்லைன்ஸ் நடவடிக்கை எடுத்துள்ளது.

சைபீரியாவின் நோவோசிபிர்ஸ்க் (Novosibirsk) நகரத்திற்கும் கொழும்புக்கும் இடையில் இயக்கப்படும் இந்த விமானங்கள் 2026 டிசம்பர் 20 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படும் என்று அந்த நிறுவனத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் உறுதிப்படுத்தியுள்ளது.

ரஷ்ய சுற்றுலா பயணிகளுக்கு கிடைக்கப்போகும் வசதி
இந்த புதிய விமான இணைப்பு மூலம் இலங்கைக்கு வரும் ரஷ்ய சுற்றுலாப் பயணிகள் ஹிக்கடுவ, பெந்தோட்டை மற்றும் திருகோணமலை போன்ற பிரபலமான கடற்கரை மற்றும் சுற்றுலாத் தலங்களை எளிதாக அடைய முடியும்.

இந்த விமானங்கள் வாரத்திற்கு இரண்டு நாட்கள், அதாவது ஒவ்வொரு வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நோவோசிபிர்ஸ்கில் உள்ள டோல்மாச்சேவோ விமான நிலையத்திலிருந்து வியாழக்கிழமை காலை 5.15 மணிக்கும் ஞாயிற்றுக்கிழமை காலை 5.00 மணிக்கும் புறப்படும் விமானங்கள், அதே நாளில் பிற்பகல் 1.40 மணிக்கு கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடையும்.

பயணத்திற்கான மொத்த நேரம்
கொழும்பிலிருந்து மீண்டும் விமானம் புறப்படுவது அதே நாட்களில் பிற்பகல் 2.50 மணிக்கு நடைபெறும், மேலும் அந்த விமானங்கள் அடுத்த நாள் அதிகாலை 2.15 மணியளவில் நோவோசிபிர்ஸ்கை செ்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த பயணத்தின் போது இந்தியாவின் ஜெய்ப்பூர் நகரில் தொழில்நுட்ப எரிபொருள் நிரப்புதல் நடைபெறும், இதற்காக பயணிகள் விமானத்தில் இருந்து இறங்க வேண்டிய அவசியமில்லை. இந்த பயணத்திற்கான மொத்த நேரம் சுமார் 10 மணிநேரம் ஆகும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.