;
Athirady Tamil News

பமுனுகம கடலில் மூழ்கி பெண் மற்றும் இரண்டு சிறுமிகள் மரணம்

0

கம்பஹா பமுனுகம, எபமுல்ல கடற்பகுதியில் குளித்துக் கொண்டிருந்தபோது காணாமல் போன 35 வயது பெண் மற்றும் இரண்டு சிறுமிகளின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், 13 வயது சிறுவன் இன்னமும் காணாமல் போயுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பமுனுகம, எபமுல்ல கடற்பகுதியில் குளித்துக் கொண்டிருந்த போது, பலத்த கடல் அலையில் இழுத்துச் செல்லப்பட்டு பெண்ணொருவரும் மூன்று சிறுவர்களும் காணாமல் போயுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

காணாமல் போனவர்கள் 35 வயதுடைய பெண், 4 மற்றும் 12 வயதுடைய இரு சிறுமிகள் மற்றும் 13 வயதுடைய சிறுவன் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதன்படி, 35 வயது பெண் மற்றும் 4, 12 வயதுடைய இரு சிறுமிகளின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதுடன், நீரில் மூழ்கி காணாமல்போன 13 வயது சிறுவனைத் தேடும் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.