வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர தீர்த்த திருவிழா இன்றைய தினம் வியாழக்கிழமை காலை நடைபெற்றது.
கடந்த 17ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான திருவிழா தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், இன்றைய தினம் வியாழக்கிழமை காலை 06.15 மணிக்கு வசந்தமண்டப பூஜை ஆரம்பமாகி ,தொடர்ந்து தீர்த்த திருவிழா இடம்பெற்றது
தீர்த்த திருவிழாவின் போது, நாட்டின் பல பாகங்களில் இருந்தும், புலம்பெயர் தேசங்களிலும் இருந்தும் இலட்ச கணக்கான பக்தர்கள் ஆலயத்திற்கு வருகை தந்திருந்தனர்
காவடிகள் , பிரதட்டைகள் , கற்பூர சட்டி என பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் தமது நேர்த்தி கடன்களை நிறைவேற்றினர் .