யாழ்ப்பாணத்தில் முன் பகை காரணமாக குடும்பஸ்தர் ஒருவர் வீதியில் வைத்து வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்
வடமராட்சி கிராமக்கோடு சந்திக்கு அருகாமையில் நேற்றைய தினம் புதன்கிழமை இரவு இடம்பெற்ற குறித்த சம்பவத்தில் ,துன்னாலை பகுதியை சேர்ந்த ஜெயசீலன் ஜெனிதன் (வயது 33) என்பவரே படுகொலை செய்யப்பட்டுள்ளார்
துன்னாலை பகுதியை சேர்ந்த இரு குழுக்களுக்கு இடையில் நீண்ட காலமாக பகைமை நீடித்து வந்த நிலையில் , குறித்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிசாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ள நிலையில் , சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு தடயவியல் பொலிஸார் , பருத்தித்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் உள்ளிட்டோர் நேரில் சென்றும் விசாரணைகளை முன்னெடுத்தனர்