;
Athirady Tamil News

தொடருந்து போக்குவரத்தில் எடுக்கப்பட்ட விசேட தீர்மானம்

0

தொடருந்து போக்குவரத்து தொடர்ச்சியாக தாமதமடைதல், தொடருந்துகள் ரத்து செய்யப்படல் மற்றும் தொடருந்துகளில் அடிக்கடி ஏற்படும் இயந்திரக் கோளாறுகள் தொடர்பில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படாமைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் தொடருந்து தொழிற்சங்கங்கள் திட்டமிட்டுள்ள பணிப்பகிஷ்கரிப்பு குறித்து விசேட கலந்துரையாடல் நடைபெற்றுள்ளது.

இதற்கமைய, தொடருந்து தொழிற்சங்கங்கள் வரும் 17 மற்றும் 18 ஆகிய இரு தினங்களில் 48 மணி நேர பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடருந்து தாமதங்கள், ரத்து செய்யப்படுபவை மற்றும் தொடர்ச்சியாக ஏற்படும் இயந்திரக் கோளாறுகள் குறித்து உரிய தீர்வுகளை வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமையே இந்த தொழிற்போராட்டத்திற்குக் காரணம் என தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.