;
Athirady Tamil News

ரூ.964 கோடி இழப்பீடு கேட்ட பிரித்தானிய பெண்: அதிர்ச்சியில் பணி நீக்கம் செய்த நிறுவனம்

0

பிரித்தானியாவில் பணிநீக்கம் செய்யப்பட்ட பெண் ஊழியர் சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் ரூ.964 கோடி இழப்பீடாக கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளார்.

பணி நீக்கம் செய்யப்பட்ட பெண்
பிரித்தானியாவில் அதீத செயற்பாட்டு கோளாறில் (ADHD) பாதிக்கப்பட்டிருந்த ஹானன் பர்ன்ஸ் பிர்மிங்காமில் உள்ள கிட்பாட் என்ற நிறுவனத்தில் பொறியியல் துணை தலைவராக பணியாற்றி வந்தார்.

இவர் நிறுவனம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ஏப்ரல் 2023ம் ஆண்டு அவுஸ்திரேலியாவின் லோஃபா நகருக்கு சென்றுள்ளார்.

இந்த பயணத்தின் போது அவர் மது அருந்திய நிலையில் மயக்கத்தில் தான் தங்கியிருந்த அறையின் சாவியை தொலைத்து விட்டார்.

இதனால், தன்னுடைய அறைக்கு செல்ல முடியாமல் வெளியே மற்றொரு அறையில் தன்னுடைய இரவை கழித்துள்ளார்.

ஹானன் பர்ன்ஸின் இந்த செயலால் கோபமடைந்த கிட்பாட் நிறுவனத்தின் CEO, தொழிற்முறை பயணத்தின் போது பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ளவில்லை என்று கூறி பணி நீக்கம் செய்துள்ளார்.

ரூ.964 கோடி இழப்பீடு கேட்ட பெண்
கிட்பாட் நிறுவனம் தன்னை பணி நீக்கம் செய்ததை எதிர்த்து ஹானன் பர்ன்ஸின் நீதிமன்றத்தில் இழப்பீடு வழக்கு தாக்கல் செய்தார்.

அத்துடன் தனக்கு ADHD பாதிப்பு இருப்பதால் தான் பணியில் இருந்து நீக்கப்பட்டு விட்டதாகவும், கிட்பாட் நிறுவனத்தின் பங்குகளில் 0.85 சதவீத பங்குகள் தன்க்கு இருப்பதாகவும் இதனால் அந்த நிறுவனம் தனக்கு ரூ 964 கோடி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

இதை எதிர்த்து மேல்முறையீடு செய்த கிட்பாட் நிறுவனம், ரூ 964 கோடி வழங்க முடியாது என்றும், ரூ 12.68 கோடி மட்டுமே இழப்பீடு தொகையாக வழங்க முடியும் என்றும் தெரிவித்துள்ளது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ரேச்சல் வெடர்ஸ்பூன், ஊழியர் கோரும் அசாதாரண இழப்பீடு தொகைக்கு உரிய நிதி நிபுணர்கள் மதிப்பீடு இல்லாமல் வழங்க முடியாது என்று தீர்ப்பளித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.