கிரிக்கெட் வீரர் சாமிக கருணாரத்னவுக்கு பிடியாணை!
நீதிமன்றத்தில் ஆஜராகாத கிரிக்கெட் வீரர் சாமிக கருணாரத்னவைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு மேலதிக நீதிவான் கசுன் காஞ்சன திஸாநாயக்க இன்று உத்தரவிட்டார்.
தனது குழந்தைக்கு பராமரிப்புப் பணம் வழங்குமாறு கோரி பெண் விமானி ஒருவர் தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்டபோதே, பிரதிவாதி நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.
இதனையடுத்து சாமிக கருணாரத்னவைக் கைது செய்ய இந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டது. இலங்கையின் பிரபல கிரிக்கெட் வீரரும் ஆல்-ரவுண்டருமான சமிக கருணாரத்னவுக்கு எதிராக, தனது குழந்தைக்கு தந்தை என விமானப் பணிப்பெண் ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.