;
Athirady Tamil News

ஏமன் உள்நாட்டுப்போர் தீவிரம்: அரசுப்படையினர் – ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மோதல்

0

சனா,

ஏமனில் அரசுப்படையினர் – ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மோதலால் உள்நாட்டுப்போர் தீவிரமடைந்து வருகிறது.

ஏமன் உள்நாட்டுப்போர்

ஏமனில் அரசுப்படையினருக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. இந்த உள்நாட்டுப்போரில் அரசுப்படையினருக்கு சவுதி அரேபியாவும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு ஈரானும் ஆதரவு அளித்து வருகின்றன.

ஏமனின் தலைநகர் சனா உள்பட பல்வேறு பகுதிகளை ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். அதேவேளை, எண்ணெய் வளம் மிக்கப்பகுதிகளை அரசுப்படையினர் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு ஈரான் ஆயுதம் உள்பட பல்வேறு உதவிகளை வழங்கி வருகிறது.

தீவிரமடையும் மோதல்

ஈரான், சவுதி அரேபியா இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவி வரும் நிலையில் ஏமனில் இரு நாடுகளும் மறைமுக மோதலில் ஈடுபட்டு வருகின்றன.

அதேவேளை, அமெரிக்கா, ஈரான் மோதலின்போது ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் சவுதி அரேபியா மீது தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக ஏமனில் ஹவுதி கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகள் மீது ஏமன் அரசுப்படையுடன் இணைந்து சவுதியும் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், கடந்த சில வாரங்களாக ஏமனில் உள்நாட்டுப்போர் தீவிரமடைந்து வருகிறது.

தாக்குதல்

இந்நிலையில், ஏமனில் அரசுப்படையினருக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையேயான மோதல் தீவிரமடைந்து வருகிறது. குறிப்பாக, கடந்த 24 மணிநேரத்தில் போர் விமானங்கள், டிரோன்கள், ஏவுகணைகள், ராக்கெட்டுகள், பீரங்கிகள் மூலம் சவுதி அரேபியாவுடன் இணைந்து ஏமன் அரசுப்படையினர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் 1,540 பேர் உயிரிழந்துள்ளனர் அல்லது காயமடைந்துள்ளனர் என்று ஏமன் அரசு தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.