;
Athirady Tamil News

80 அடி பள்ளத்தில் கவிழ்ந்த லொறி ; மூன்று பேர் வைத்தியசாலையில்

0

மஸ்கெலியாவில் லொறி ஒன்று 80 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மூன்று பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச் சம்பவம் நேற்று (21) மாலை 6.00 மணிக்கு நல்லதண்ணி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மரே தோட்ட புதுகாடு பகுதியில் இடம்பெற்றுள்ளது.

தேயிலை கொழுந்து ஏற்றிக் கொண்டு, தொழிற்சாலைக்கு திரும்பிய சந்தர்ப்பத்திலேயே வீதியை விட்டு விலகி இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் அதில் பயணித்த மூன்று பேர் படுகாயமடைந்த நிலையில் மஸ்கெலியா மாவட்ட வைத்திய சாலையில் அனுமதிக்க பட்டு மேலதிக சிகிச்சைக்காக டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்திய சாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை நல்லதண்ணி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.