;
Athirady Tamil News

நாட்டில் டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 78 ஆக அதிகரிப்பு

0

இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் இடம்பெற்ற டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 78 ஆக அதிகரித்துள்ளது.

தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் தரவுகளுக்கு அமைய, இதுவரை பதிவாகியுள்ள மொத்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 100,871 ஆகும் என்பதுடன், அதன் மரண விகிதம் 0.077% ஆகப் பதிவாகியுள்ளது.

மேலும், மொத்த நோயாளர்களில் 52.45% அதாவது 52,906 நோயாளர்கள் மேல் மாகாணத்திலேயே பதிவாகியுள்ளனர்.

மாவட்ட மட்டத்தில் பார்க்கையில், அதிகளவிலான நோயாளர்கள் கம்பஹா மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளதுடன், அவ்வெண்ணிக்கை 21,377 ஆகும்.

அதற்கு மேலதிகமாக, கொழும்பு மாவட்டத்தில் 19,759 நோயாளர்களும், கண்டியில் 7,689 நோயாளர்களும், களுத்துறையில் 6,400 நோயாளர்களும், மாத்தறை மாவட்டத்தில் 6,305 நோயாளர்களும் பதிவாகியுள்ளனர்.

மாதாந்தத் தரவுகளைப் பார்க்கையில், ஒக்டோபர் மாதத்தின் கடந்த சில நாட்களில் 151 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், செப்டம்பர் மாதத்தில் பதிவான நோயாளர்களின் எண்ணிக்கை 5,230 ஆகும்.

ஜூலை மாதத்திலேயே அதிகளவிலான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், அவ்வெண்ணிக்கை 29,964 ஆகும்.

இது தவிர, ஜூன் மாதத்தில் 21,533 நோயாளர்களும், ஓகஸ்ட் மாதத்தில் 10,155 நோயாளர்களும் பதிவாகியுள்ளனர். தற்போது 37 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் டெங்கு அதி ஆபாய வலையங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

நுளம்புகள் பெருக்கம் அடையும் இடங்களை அழித்து, சுற்றாடலைச் சுத்தமாக வைத்திருப்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு சுகாதாரப் பிரிவினர் பொதுமக்களிடம் மேலும் கோரியுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.