அரசியலில் அறிக்கைகள் வெளியிடுவது மிகவும் அவசியம்-இலங்கை உலமா கட்சியின் தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவிப்பு
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது:
அறிக்கைகளின் அரசியல் முக்கியத்துவம்: “தற்போது ஹரீஸ் அவர்கள் நம்மைப் போன்று அறிக்கைகளை வெளியிட ஆரம்பித்துள்ளார். அரசியலைப் பொறுத்தவரை அறிக்கை எவ்வளவு அவசியம் என்பதை அவர் புரிந்து கொண்டது மகிழ்ச்சிக்குரிய விடயமாகும். அறிக்கை விடத் தெரியாதவன் ஒருபோதும் அரசியல்வாதியாக இருக்கத் தகுதியற்றவன்.”
தலைவர் அஷ்ரஃபின் வழிகாட்டல்: “என்னை ‘அறிக்கை மன்னன்’ எனக் கேலி செய்தவர்களும் உண்டு. ஆனால், மறைந்த தலைவர் எம்.எச்.எம். அஷ்ரஃப் அவர்கள் அமைச்சராகப் பொறுப்பேற்பதற்கு முன்னதாக அவர்தான் உண்மையான அறிக்கை மன்னராகத் திகழ்ந்தார் என்பதை நான் அப்போது சுட்டிக்காட்டினேன். எவ்வாறு அரசியல் அறிக்கை வெளியிட வேண்டும் என்பதை நான் தலைவர் அஷ்ரஃபின் அறிக்கைகளைப் படித்துப் பார்த்தே கற்றுக்கொண்டேன்” என்றும் அவர் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.