தீபாவளியை முன்னிட்டு வவுனியாவில் சுகாதாரப் பரிசோதகர்களின் தீவிர சோதனை: 60-க்கும் மேற்பட்ட வர்த்தக நிலையங்களுக்கு எச்சரிக்கை!
தீபாவளிப் பண்டிகையைக் முன்னிட்டு பொதுமக்களின் சுகாதாரப் பாதுகாப்பையும் உணவுப் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும் நோக்கில், வவுனியா நகரப் பகுதியில் உள்ள பல்வேறு வியாபார நிலையங்களில் சுகாதாரப் பரிசோதகர்கள் தீவிரத் திடீர் சோதனைகளை முன்னெடுத்தனர்.
இந்த அதிரடிச் சோதனையானது
பொருளாதார மத்திய நிலையத்தில் அமைந்துள்ள மரக்கறிச் சந்தை, நகரப் பகுதியில் உள்ள பலபொருள் அங்காடிகள், புடவை விற்பனை நிலையங்கள், உணவகங்கள்,
மருந்தகங்கள் உள்ளிட்ட பல்வேறு வியாபார ஸ்தலங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
குறிப்பாக, உணவகங்கள் மற்றும் சந்தைப் பகுதிகளில் சுகாதாரமற்ற முறையில் உணவுப் பொருட்கள் விற்கப்படுவதைத் தடுத்தல் மற்றும் நுளம்புப் பெருக்கு ஏற்படுவதைத் தடுப்பதற்கான கட்டுப்பாடு நடவடிக்கைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டன.
இந்தச் சோதனையின் போது சுகாதார விதிமுறைகளைப் பேணத் தவறிய மற்றும் அவற்றை மீறிச் செயற்பட்ட 60-க்கும் மேற்பட்ட வர்த்தக நிலையங்களுக்குக் கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
வர்த்தக நிலையங்களின் சூழலை உடனடியாகச் சீர்செய்து, சுகாதார முறைகளைப் பின்பற்றி வியாபாரத்தை நடத்துமாறு சுகாதாரப் பிரிவினர் கடுமையான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளனர்.
